மாரடைப்பு பற்றி அல்குர்ஆன் என்ன கூறுகிறது?

What-does-the-Qur’an say-about-heart-attacks

மாரடைப்பு (Heart attack) ஏற்பட்ட ஒருவர் மரணிப்பதற்கான கால அளவு அவரது உடல்நிலை, அடைப்பின் தீவிரம், உடனடியாகக் கிடைக்கும் சிகிச்சை மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து மாறக்கூடியது. எதிர்பாராத விதமாக பெரும்பாலான மரணங்கள் (Sudden Cardiac Death) மிகக் குறுகிய காலத்திலேயே நிகழ்கின்றன.

மாரடைப்பின் அபாய அறிகுறிகள் தோன்றிய முதல் சில நிமிடங்களிலிருந்து, ஒரு மணி நேரம் வரை (Golden Hour) மரணங்கள் நிகழும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

சில நபர்களுக்கு இந்த ஒரு மணி நேரம் கூட அதிகம்தான்.மாரடைப்பு ஏற்பட்டு சில வினாடிகளில் அல்லது சில நிமிடங்களில் உயிர் பிரிகிறது.

மரணத்தின் மீதான பயம்

மரணத்தின் மீதான பயத்தை உளவியல் மொழியில் “Thanatophobia” என்று அழைக்கிறார்கள்.

உலகில் மனிதன் மட்டுமே மரணத்தை முன்கூட்டியே தெரிந்து பயப்படுகின்ற ஒரேயொரு உயிரினமாகும்.

மற்ற உயிரினங்களும் ஆபத்தையும் வலியையும் உணர்கின்றன; ஆயினும்,அவற்றின் அச்சம் என்பது நிகழ்காலச் சூழலுடன் பிணைக்கப்பட்ட உயிர்வாழும் உள்ளுணர்வின் (Survival Instinct) எல்லைக்குள்ளேயே நடக்கிறது.

ஆனால் மனிதன் மட்டும்தான், எதிர்காலத்தில் வரும் தனது இறுதியான முடிவைப் பற்றி அஞ்சி, அதைப் பற்றி எல்லையற்று சிந்திக்கிறான்.

தனியாக இருந்தால் எதிரிகள் தாக்கி விடுவார்களோ! என்ற பயம், சாலையை கடக்கும் போது வாகனம் மோதிவிடுமோ! என்ற பயம், விமானத்தில் பயணம் செய்தால் விபத்து ஏற்படுமோ! என்ற பயம், லிஃப்டில் ஏறினால் கீழே விழுந்துவிடுமோ! என்ற பயம்,கடலின் பெரிய அலைகளைப் பார்த்தால்,சுனாமி வருகிறதோ! என்ற பயம் இவை எல்லாம் மனிதனுக்கு ஏற்படும் மரணப் பயங்களாகும்.

மனிதன் இயல்பாகவே பயமும் பதட்டமும் அகன்று, நம்பிக்கையும் பாதுகாப்பும் நிரம்பிய மனநிலையில்தான் எப்போதும் இருக்க விரும்புகிறான். அதனால்,தன்னை முழு வசதியிலும் நிம்மதியிலும் நிலை நிறுத்திக் கொள்ள (Comfort Zone) கடும் பாடுபடுகின்றான்.

இப்படியெல்லாம் வாழும் மனிதன், மரணத்தை எதிர்கொள்வதில் பயப்படாமல் இருக்க முடியுமா?

அல்லாஹ் தஆலா கூறுகிறான்

நீங்கள் எங்கிருந்த போதிலும், உங்களை மரணம் அடைந்தே தீரும்.நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்தாலும் சரியே! (04:78)

மனிதன் தனக்கு எதிரிகளால் மரணம் வந்து விடுமோ! என்ற பயத்தில் கட்டப்பட்ட கோட்டைகளில் மிகவும் பாதுகாப்பான சூழலிலும் மன நிலையிலும் (Comfort Zone) வசதியாக வாழ்ந்தாலும்,அவனை மரணம் வந்தே தீரும் என்பது அல்குர்ஆன் வாக்கு.

ஒருவனை கோட்டைக்கு முன் 1000 பேர் பாதுகாத்திருக்க,கோட்டையினுள் 500 பேர் பாதுகாத்திருக்க, அறையினுள் 100 பேர் விசுவாசமாகப் பாதுகாத்திருக்க எப்படி ஒருவனுக்கு மரணம் வரும்? என்று நாம் யோசிக்கலாம்.

ஆம் வரும்! அதில் ஒன்றுதான் மாரடைப்பாகும்.

மனிதன் எங்கு ஒழிந்து மறைந்து இருந்தாலும் அவனை மரணம் அடைந்தே தீரும் என்கிறது அல்குர்ஆன். மாரடைப்பு (Heart attack) அதற்கான ஒரு ஊடகமாகும்.

மரணம் என்பது வெளி உலகு சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல, அது தனிப்பட்ட உடலியல் சார்ந்த நிகழ்வும் கூட என்பதை அல்குர்ஆன் மிக நுட்பமாக விபரிக்கிறது.

அல்குர்ஆனில் “மாரடைப்பு” என்ற வார்த்தை நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும்,மரணங்கள் நிகழும் முறைகள் பற்றி குறிப்பிடப்பட்டிருப்பது,மறைமுகமாக மாரடைப்பை குறிக்கிறது.

நூஹ் நபியின் சமுதாயமும் மாரடைப்பும்

நூஹ் நபியின் கூட்டத்தார் அல்லாஹ்வுக்கு மாறு செய்ததால்,அவர்களை மிகப் பெரிய வெள்ளம் மூலம் அழித்ததாக அல்குர்ஆன் கூறுகிறது.

நிச்சயமாக அவர்கள் மிகவும் கெட்ட சமுதாயத்தினராக இருந்தனர்.ஆதலால்,
அவர்கள் அனைவரையும் நாம் மூழ்கடித்தோம். (21:77)

நீரில் மூழ்கி இறப்பதற்கும்,மாரடைப்புக்கும் மிகவும் நெருங்கிய,நுண்மையான தொடர்பு உள்ளது.

அது என்னவெனில்,மாரடைப்பின் போது மூளைக்குச் செல்லும் இரத்தம் தடைபடுகிறது.அதேவேளையில், நீரில் மூழ்கும் போது நுரையீரலுக்குச் செல்லும் ஆக்ஸிஜன் தடைபடுகிறது.

இவ்விரண்டும் வெவ்வேறு நிகழ்வுகளாக இருந்தாலும், மூளைக்கான ஆக்ஸிஜன் தேவை பற்றிய ஒரு பொதுவான நுணுக்கத்தைக் காட்டுகின்றன.

Scroll to Top