Ibreeq என்ன பேசுகிறது?

எங்கள் வலைப்பதிவு பற்றி

Ibreeq என்பது இரண்டு பிரதான கருப்பொருட்களின் கீழ் ஆழமான அறிவுசார் அடித்தளத்தை இட்டுள்ள ஓர் இஸ்லாமிய அறிவான்மிகத் தளமாகும்.

about our blog (1)
about us 1 scaled

அறிவியல் & உளவியல் (Science & Psychology)

இப்பகுதி அறிவியல் உண்மைகள் (Science), மனித உளவியல் (Psychology), மற்றும் இஸ்லாமிய மெய்ப்பொருளியல் (Islamic Metaphysics) ஆகிய மூன்று அறிவுப் பரப்புகளுக்கிடையிலான அறிவுசார் இயைபை (Intellectual Resonance) ஆழமாக ஆராய்கிறது.

இங்கு ‘இஸ்லாமிய மெய்ப்பொருளியல்’ என்பது இலாஹிய்யாத் (இருப்பின் ஆதிமூலம் மற்றும் இறைவனின் எதார்த்தம் குறித்த ஆய்வு), நுபுவ்வாத் (தூதுத்துவயியல்: இறைவனுக்கும் மனிதனுக்குமான தொடர்பு குறித்த ஆய்வு) மற்றும் சம்இய்யாத் (மறைபொருளியல்: மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்வு மற்றும் காலம் கடந்த எதார்த்தங்கள் குறித்த ஆய்வு) ஆகிய மூன்று அகீதா உட்பிரிவுகளையும் அறிவுப்பூர்வமாக அணுகுவதைக் குறிக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால், நாங்கள் கையாளும் ‘இஸ்லாமிய மெய்ப்பொருளியல்’ என்ற சொல்லாடல் கிரேக்கச் சிந்தனைக் குழந்தை அல்ல; மாறாக, தவ்ஹீத் (ஏகத்துவம்) என்னும் அசைக்க முடியாத அஸ்திவாரத்தின் மீது நின்று, ‘வஹ்ய்’ காட்டும் வெளிச்சத்தில் அகிலத்தின் எதார்த்தங்களை அணுகும் இஸ்லாமிய அறிவுசார் தேடலின் தொடர்ச்சியாகும்.

வாழ்க்கையின் ஆழமான பொருளையும், அதன் உன்னதமான சமநிலையையும் (The Divine Balance), இஸ்லாமிய மெய்ப்பொருளியல் நோக்கில் அணுகுவதன் மூலம், நவீன உலகிற்கு இஸ்லாமிய வாழ்வியலை ஒரு புதிய கோணத்தில் முன்வைக்க முயல்கிறோம்.

சில உறுதிப்படுத்தப்பட்ட (Established Findings) அறிவியல் மற்றும் உளவியல் கருத்துகளின் பின்னணி மற்றும் அமைப்பை நாம் ஆராயும் போது, அவை இஸ்லாமிய இறைஞான நுண்ணறிவின் அறிவுசார் விளக்கங்களாகத் தோன்றுகின்றன.

பரிணமித்து வரும் அறிவியல் மற்றும் உளவியல் புரிதல்களின் பின்னணியில், படைப்பின் ஆழத்தையும் அதன் அர்த்தத்தையும் புதிய கோணத்தில் சிந்திக்கச் செய்கின்ற ஓர் இஸ்லாமிய அறிவுப் பார்வையை இப்பகுதி முன்வைக்கிறது. click here for more details about it ………….

அறநெறி & மெய்ஞானம் (Shari’ah & Ma’rifa)

இப்பகுதி இஸ்லாமிய ‘ஷரீஅஹ்’ வழங்கும் சட்ட விழுமியங்கள், ஒழுக்கநெறிகள், தார்மீகக் கடமைகள், வழிகாட்டல்கள் மற்றும் அறிவுரைகளை உள்ளடக்கியது.

தனிமனித ஒழுக்கம், குடும்ப உறவுகள், சமூக உரிமைகள் மற்றும் நவீன காலச் சவால்களுக்கு இஸ்லாமியச் சட்டவியல் (Fiqh) வழங்கும் அறிவுப்பூர்வமான தீர்வுகள் என அனைத்தையும் ஒரு வாழ்வியல் கலையாக இப்பகுதியில் நாம் விளக்குகிறோம்.

நாம் மார்க்கச் சட்டங்களை வெறும் சடங்குகளாகப் பார்க்காமல், மனித இயல்போடு ஒன்றிணைந்த ஒரு தார்மீகத் தேவையாகக் கருதுகிறோம்.

quran 6114880 1280
our mission scaled

மெய்ஞானம் (Ma'rifa)

“ஹகீகஹ்” என்று அழைக்கப்படும் மெய்ஞானம் என்பது வெறும் கற்பனையோ அல்லது மாயையோ அல்ல; அது ‘ஷரீஅஹ்’ வின் ஆழமான உட்பொருளைத் தேடும் ஒரு உள்ளகப் பயணமாகும்.

“ஷரீஅஹ் என்பது ஹகீகஹ்வின் சாராம்சமே” (الشريعة عين الحقيقة) என்ற ஆன்மிக விதியை மையமாக வைத்தே எமது மெய்ஞானத் தேடல் அமைகிறது.

ஷரீஅஹ் என்பது ஒரு மரத்தின் உறுதியான வேர் மற்றும் கிளைகள் போன்றது. ஹகீகஹ் என்பது அந்த மரத்திற்குள் ஓடும் உயிர்ச்சாறு மற்றும் அது தரும் கனி போன்றது.

வேர் இல்லாமல் கனி இல்லை; கனி தராத மரத்தால் பயனில்லை. இந்த இரண்டின் பிரிக்க முடியாத பிணைப்பையே இப்பகுதி விளக்குகிறது.

ஷரீஅஹ் இல்லாமல் ஹகீகஹ் இல்லை; ஹகீகஹ் இல்லாமல் ஷரீஅஹ் இல்லை. இவ்விரண்டையும் பிரிப்பது முழுமையற்ற தேடலாக அமையும்.

ஷரீஅஹ் என்ற சட்டகத்திற்குள் நின்றுகொண்டு, அதன் ஆன்மாவான ஹகீகஹ்வை (உண்மைப் பொருளை) உணர்வதே ஒரு பூரணமான முஃமின் அடைய வேண்டிய உண்மையான இஸ்லாமிய இறைஞான இலக்காகும்.

அது, இறைவனோடு ஆன்மா கொள்ளும் ஆழமான காதலையும், அண்ணல் நபீ ﷺ அவர்கள் காட்டித் தந்த அகத்தெளிவையும் (Tazkiyah) விளக்கும் மெய்ஞான உணர்வாகும்.

எமது பணி (Our Mission)

நாங்கள் சிக்கலான அறிவியல் மற்றும் தத்துவக் கருத்துக்களை எளிமைப்படுத்துகிறோம்; ஆய்வுகளை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் விளக்குகிறோம்; இஸ்லாமியப் பாரம்பரிய அறிவை நவீன காலச் சூழலுக்கு ஏற்பவும், தர்க்கரீதியாகவும் அணுகுவதற்கான வழிமுறைகளை அமைக்கிறோம்.

mosque 8089666 1280
book 1835799 1280

எமது தொலைநோக்கு (Our Vision)

நம்பிக்கைக்கும் பகுத்தறிவுக்கும் இடையே உள்ள செயற்கையான சுவர்களை உடைத்து, ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தையும் இறைவனின் ஒருமைத்துவத்தின் (தவ்ஹீத்) கீழ் தரிசிக்கும் ஓர் அறிவுசார் சமூகத்தை உருவாக்குவதே எமது தொலைநோக்காகும்.

அல்குர்ஆனின் ஒளி, அண்ணல் நபீ ﷺ அவர்களின் வழிகாட்டல்கள் மற்றும் நவீன கால அறிவுப்பரப்புகள் ஆகியவை முன் முடிவு இன்றி (Without Preconceived Notions) எதார்த்தமாக இணையும் ஓர் நம்பகமான இணையதள வளமாக ibreeq.com திகழ வேண்டும் என்பது எமது மார்க்கப்பணியாகும்.

எமது தேடல் களங்கள் (What We Explore)

• விண்வெளி & காலம் (Space & Time)
 
•மூளை & மனித மனம் (Brain & Human Mind)
 
•அறநெறி & மனித நடத்தை அறிவியல் (Ethics & Behavioral Science)
 
•உறவுகள் & சமூகம் (Life & Relationships):
 
•சுகாதாரம் & நல்வாழ்வு (Wellness & Health)
 
•உணவு & வாழ்வியல் (Diet & Lifestyle)
 
•உயர் சிந்தனை & மெய்ஞானம் (Higher Thought & Gnosis)
dome 3545440 1280
istanbul 7155395 1280

எமது வாசகர்கள் (Who We Serve)

• அறிவுசார் முஸ்லிம்கள் (Intellectual Believers)
 
•பகுத்தறிவுத் தேடலாளர்கள் (Rational Seekers)
 
•மாணவர்கள் & கல்வியாளர்கள் (Students & Academics)
 
•உள்ளகத் தேடலாளர்கள் (Inward Seekers)

உண்மைக்கான எமது அர்ப்பணிப்பு (Our Commitment to Truth)

நாங்கள் நேர்மை, துல்லியம் மற்றும் அறிவுசார் நம்பகத்தன்மை (Intellectual Authenticity) ஆகியவற்றுக்காக எம்மை முழுமையாக அர்ப்பணிக்கிறோம்.

எமது கட்டுரைகள் அனைத்தும் அல்குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்கள் வழங்குகின்ற மாறாத உண்மைகள், பேரறிஞர்களின் கூற்றுகள், மெய்ஞானிகளின் மெய்ஞானப் பார்வைகள் மற்றும் தரவு அடிப்படையிலான அறிவியல் ஆய்வுகள் (Peer-reviewed Research) ஆகியவற்றின் அடிப்படையில் ஓர் உன்னதமான சமநிலையுடன் முன்வைக்கப்படுகின்றன.

சிக்கலான தத்துவக் கருத்துக்களை எவ்விதக் குழப்பமுமின்றித் தெளிவுடனும், அறிவுசார் மரியாதையுடனும் முன்வைப்பதில் நாம் மிகக் கவனமாக இருக்கிறோம். ஒவ்வொரு பதிவும் உங்கள் சிந்தனைக்குத் விருந்தாகவும், ஆன்மாவுக்கு அமைதியாகவும் அமைவதை நாம் உறுதி செய்கிறோம்.

உங்களின் இந்த அறிவுசார் பயணம், ஒரு தூய்மையான தேடலோடு இங்கே தொடங்கட்டும்!

அல்லாஹ் உங்களுக்கு அறிவின் வாசல்களை திறந்து அருள்வானாக!

Scroll to Top