ஃபக்ஹ்ருத்தீன் ஸுஹ்தீ றப்பானீ, மிஸ்பாஹீ
நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியர்
அறிமுகம்
Ibreeq உடைய நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியரான ஃபக்ருத்தீன் ஸுஹ்தீ அல் றப்பானீ, அல் மிஸ்பாஹீ சிறு வயது முதலே இன்றைய நவீன அறிவியல் மற்றும் உளவியல் கண்டுபிடிப்புகள் எவ்வாறு இஸ்லாமியக் கோட்பாடுகளையும், சிந்தனைகளையும், போதனைகளையும் புரிந்துகொள்ள உதவும் ஒரு மொழியாகவும், கண்ணாடியாகவும் (Reflection) விளங்குகின்றன என்பது பற்றி சிந்தித்து வருகிறார்.
இந்தச் சிந்தனையினதும், தேடலினதும் இயல்பான நீட்சியாகவே Ibreeq உருவானது.
சிந்தனை மற்றும் நோக்கம்
இவர் இறை நம்பிக்கையும், பகுத்தறிவும்,
ஆன்மிக உள்ளுணர்ச்சியும், அறிவியல்,
உளவியல் ஆய்வுகளும் ஒரே உண்மையை நோக்கிச் செல்லும் தேடலின் வெவ்வேறு வெளிப்பாடுகள் என்பதை ஆராய்வதில் தீவிர ஆர்வம் கொண்டுள்ளார்.
இவர் தனது எழுத்துகள் நடை மூலம் சிக்கலான அறிவியல், உளவியல் ஆய்வுகளை இஸ்லாமிய ஆன்மிகத்துடன் இணைத்து, கருத்துக்களை எளிமைப்படுத்தி, அவற்றை அன்றாட வாழ்க்கைக்குப் பயனுள்ள வகையில் மக்களுக்கு வழங்கி வருகிறார்.
ஆய்வு முறையியல் (Methodology)
இவர் ஒரு கருத்தையோ அல்லது ஒரு கட்டுரையையோ வெளியிடுவதற்கு முன்னர், குர்ஆன், ஹதீஸ் மற்றும் அறிஞர் பெருமக்களின் ஞானப் பொக்கிஷங்கள் மற்றும் பலதரப்பட்ட அறிவியல், உளவியல் ஆய்வுகளிலிருந்தும் ஆதாரங்களைத் திரட்டுகிறார்.
அவ்வாறு திரட்டிய தரவுகளைக் கொண்டு, அறிவுபூர்வமான, சமச்சீரான மற்றும் நேர்மையுடன் கூடிய உள்ளடக்கங்களை மட்டுமே வழங்குவதில் உறுதியான அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்.
இஸ்லாமிய ஆன்மிக ஞானத்தின் தூய்மையை, நவீன அறிவியல் மற்றும் உளவியல் ஆதாரங்களின் வெளிச்சத்தில் பிரதிபலிப்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்ட இவர், இதன் மூலம், இஸ்லாமிய ஆன்மாவின் அழகும், அமைதியும், சத்தியமும் உலகறியச் செய்யப்பட வேண்டும் என்ற ஆழமான நோக்கத்துடன் செயல்படுகிறார்.
மனித விளக்கங்கள் எல்லாமே காலத்திற்கும் சூழலுக்கும் உட்பட்டவை என்பதை உணர்ந்து, புதிய ஆய்வுகள் வெளிவரும் போது தமது கருத்துகளை மீளாய்வு செய்யும் அறிவார்ந்த திறந்த மனப்பான்மையுடன் இயங்குகிறார்.
இவர் எழுதும் ஒவ்வொரு படைப்பும், இவரது சொந்தமான ஆராய்ச்சி, ஆழமான ஆய்வு மற்றும் தீவிரமான புரிதலின் அடித்தளத்திலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது.
அறிவியல் உண்மைகள், உளவியல் விழிப்புணர்வு, சுய ஒழுக்கம் மற்றும் ஆழமான ஆன்மிகத் தத்துவம் ஆகியவற்றை இஸ்லாமின் ஊடாக வாசகர்களிடம் விதைப்பதை தனது உள்ளார்ந்த ஆனந்தமாகக் கொண்டுள்ளார்.
இந்தத் தளத்தின் வாயிலாக, வாசகர்கள் தங்கள் அறிவு, மனம், ஆன்மா மற்றும் இறை நம்பிக்கையில் ஓர் ஆழமான எழுச்சியையும் நிலையான வளர்ச்சியையும் காண வேண்டும் என்பதே இவரது இதய பூர்வமான விருப்பமாகும்.
கல்விப் பின்னணி
இவர் இலங்கையில் தனது ஆரம்பகால மார்க்கக் கல்வியை முறையாக நிறைவு செய்த பின், இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் உள்ள வரலாற்றுப் பெருமைமிக்க ‘அல் ஜாமிஅதுல் அஷ்ரஃபிய்யஹ் மிஸ்பாஹுல் உலூம்’ பல்கலைக்கழகத்தில், பாரம்பரிய இஸ்லாமியக் கல்வி மரபுகளின் படி, அடிப்படை நூல்கள் (Matn) மற்றும் விளக்க உரைகளை (Sharh) நுணுக்கத்துடன் கற்றுத் தேர்ந்தவர். குறிப்பாக, ஹதீஸ் கலை மற்றும் அதன் ஆய்வு முறையியலில் (Principles of Hadith) உயர் ஆய்வுகளை நிறைவு செய்தவர்.
இஸ்லாமிய அறிவியல் (Islamic Sciences) மற்றும் சமகால அறிவியல் (Contemporary Sciences) ஆகிய இரண்டையும் ஒருங்கிணைக்கும் இவரது இந்தச் சமநிலைப்பட்ட அணுகுமுறை, நவீன உலகின் கேள்விகளுக்குப் பாரம்பரிய இஸ்லாமிய அறிவின் வெளிச்சத்தில் தெளிவான விடைகளை வழங்குகிறது.
